Saturday, March 19, 2011

சூரிய ஒளிக் குளியல்

சூரிய ஒளிக் குளியல்

குறைந்த அளவு உடை உடுத்திக் கொண்டு நின்றோ, அமர்ந்தோ, படுத்தோ இந்தக் குளியல் எடுக்கலாம். சுரிய ஒ:ளி நமக்கு நிறைய ஆற்றலை வழங்குகிறது. விட்டமின் டி சுரிய ஒளியில் உள்ளது. அது தலை வலி மூலமாகவும், வியர்வை மூலமாகவும் உடலின் அழுக்கு களை வெளியேற்றி உடலுக்கு தேவையான உஷ்ணத்தையும் தருகிறது.


சூரிய ஒளியின் நன்மைகள்:
(1) தோல் கேன்சர் சூரிய ஒளி அதிகமாக உள்ள நாடுகளில் மிகவும் குறைவு.
(2) தோல் வியாதிகள் மிகவும் குறைவு.
(3) கறுப்பு நிறத் தோலே வெளிர் நிறத்தோலை விட ஆரோக்கியமானது.
(4) காலை 9 மணிக்கு முன்னரும் மாலை 4 மணிக்கு பின்னரும் இதை எடுக்க வேண்டும். சூரியஒளி அதிகமாக உள்ள நாடுகளில் 20 நிமிடத்திற்கு மேல் எடுக்க வேண்டாம்.

எனிமா



இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கிறது.
மலச்சிக்கல் உள்ள உடலில் கிருமிகள் உற்பத்தியாகும். எனவே இரத்தத்தில் நச்சுக்கள் ஏற்ப்படும். உடல் நோய் வாய்ப்படும். மலச்சிக்கலினால் உடல் உஷ்ணம் அடைகிறது. இது மூல வியாதிக்கு காரணம் ஆகிறது. நாம் வாய் கொப்பளிப்பது போல எனிமா குவளையை குடலை கழுவ பயன்படுத்தலாம். மலச் சிக்கல் இருந்தால் இதனை தினமும் பயன் படுத்தவேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் இருக்க அதிக நார்ச் சத்துள்ள உணவு(இயற்கை உணவு) உண்ண வேண்டும். இயற்கை உணவும் உண்டு நாக்கில் வெள்ளை படலமும் இல்லாமல் இருந்தால் வாரம்
1 முறை எனிமா எடுத்தால் போதுமானது. மலம் ஒட்டுவது மலச்சிக்கலை குறிக்கிறது. குழந்தைகள் கூட இதை பயன்படுத்தலாம். தலை வலி, காய்ச்சல், சளி தொந்தரவுக்கு இதை பயன் படுத்தலாம். சமையல் உணவில் இருப்பவர்களுக்கு இது பயன் தரும்.


எப்படி உபயோகப்படுத்துவது?
எனிமா கப்பை தண்ணீர் ஊற்றி தலைக்கு மேலே ஒரு உயரத்தில் தொங்க விடவும். பின் நாசில் வழியாக தண்ணீரை மலத்து வாரத்திற்குள் முன்புறம் குனிந்தவாறு செலுத்தவும். நாசிலில் சிறிது எண்ணெய் பூசிக் கொள்ளலாம். தண்ணீர் அனைத்தும் குடலுக்குள் சென்ற பிறகு 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்கவும். படுத்திருந்தால் மலத்தை அடக்க எளிதாக இருக்கும். பலனும் நன்றாக இருக்கும். பிறகு மலம் கழிக்கலாம். குடலில் தேங்கியுள்ள நாட்பட்ட கழிவுகள் எல்லாம் வெளியேறும். குடிப்பதற்காக பயன் படுத்தும் நீரையே இதற்கும் பயன்படுத்த வேண்டும்.

கண் குவளை / மூக்கு குவளை

கண் குவளை

இது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனமாகும். இது இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். அல்லது ஒரு நீர் நிரம்பிய சிறிய கிண்ணத்தையும் பயன்படுத்தலாம். இது இரவு நேரம் விழித்து பணி புரிபவர்கள், கணினியில் பணி புரிபவர்கள், டி.வி. பார்ப்பவர்கள், தூசியில் பணிபுரிபவர்கள், வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கும் பயன்படும். இது கண்களை குளிர்ச்சி அடைய வைக்கும்.
இந்த குவளையில் கண்ணை வைத்து இடது மற்றும் வலது புறமாக சுழற்ற வேண்டும். (5 நிமிடங்கள்). முதலில் சிறிது சிரமமாக இருக்கும். இது கண்களை பாதுகாக்க ஒரு எளிய வழியாகும்.



மூக்கு குவளை

இதற்கான சாதனமும் இயற்கை சிகிச்சை மையங்களில் கிடைக்கும். சிறிதளவு உப்பு போட்டு தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொள்ளவும். அதற்கென உள்ள சாதனத்தில் இந்த நீரை ஊற்றிக் கொள்ளவும். முன்புறம் வளைந்து தலையை மேல்புறமாக திருப்பி வைத்து கொள்ளவும். வாயின் வழியாக மூச்சு விட்டுக் கொண்டு நீரை சிறிது சிறிதாக வலது நாசியில் விடவும். நீர் இடது நாசி வழியாக வெளியேறும். இதையே இடது நாசிக்கும் மாற்றிச் செய்யவும். இது சுவாச சம்பந்தமான பிரச்சனைகளான சளி, சைனஸ், ஆஸ்துமா, டிபி(காச நோய்) போன் றவைகளுக்கு பயன் தரும்.